Archive for April 2012

மீண்டும் டெசோ -கருணாநிதி வீரவசனம்


இதோ இன்னும் ஒரு எடுத்துகாட்டு ...

தமிழ்நாட்டில் 1980களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது

சீமானை தவிர வேறு ஒருவரும் இதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்கவில்லை 

தமிழனின் வீரம் அரும்காட்சியகத்தில் வைத்து பூட்ட பட்டதை நன்கு தெளிவு படுத்துகிறது 

ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழகர் மாண்டு கொண்டு இருக்கும்  போது பத்து நிமிடம் உண்ணாநிலை இருந்தவர் தானே?


அப்போது ஆரம்பிக்க வேண்டியது தானே?

இப்பொழுது மட்டும் எங்கிருந்து தமிழ் உணர்வு பொங்கி கொண்டு வந்தது?   

இது புதுகோட்டை தேர்தலுக்கு ஆயத்தமோ? 
  
Saturday, April 28, 2012
Posted by Blogger

யார் இந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்





கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் (வயது 32), சொந்த ஊர் வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரம்.இவரது தந்தை ஏ.வரதாஸ். ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். தாய் கங்காதேவி. இவர்கள் பாளை தியாகராஜநகர் அருகே உள்ள ராம்நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். அலெக்ஸ் பால் மேனனின் தங்கை மெர்லின் ஜுலியட். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் பாளையை சேர்ந்த புஷ்ப பாக்கியம் என்ற ஆஷா என்பவருக்கும் அலெக்ஸ் பால் மேனனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இருவரும் சத்தீஸ்கரில் வசித்து வந்தனர். ஆஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அலெக்ஸ் பால் மேனனின் தாய் கங்காதேவி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியவர். தனது மகனையும் கலெக்டர் ஆக்கி ஏழைகளுக்கு சேவை செய்ய வைக்க வேண்டும் என எண்ணியிருந்தார். இதை அடிக்கடி தனது மகனிடம் கூறுவாராம். இந்த நிலையில் அலெக்ஸ் பால் மேனன் 10-ம் வகுப்பு படிக்கும் போதே தாய் கங்காதேவி இறந்து விட்டார்.


தாயின் கனவை நனவாக்க கலெக்டர் ஆகி சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பால் மேனன் தீவிரமாக படித்தார். பாளை ரோஸ்மேரி மெட்ரிக்பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த அலெக்ஸ் பால் மேனன் திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு முடித்தார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதலில் ஐ.ஆர்.எப். தேர்ச்சி பெற்றார். 2006-ம் ஆண்டு ஐ..எஸ்.தேர்வு எழுதி தமிழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவரது சிறப்பான பணிக்காக மாநில அரசிடம் இருந்து 3 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்க மனமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர் அலெக்ஸ். திரைப்படங்கள் மீது நல்ல ஆர்வம் கொண்டவர். ஜப் வி மெட், ஹோலி ஸ்மோக், சுப்பிரமணியபுரம் ஆகியவை இவர் ரசித்துப் பார்த்த சில படங்களாம்.மக்களுக்கு உதவாத சட்டங்கள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் கூட இவர் விரக்தியுடன் எழுதியுள்ளார். கலை, திரைப்படம், இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லீனா மணிமேகலையும், சாரு நிவேதிதாவும்.


இவரது பெயரைப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் சட்டென புரிபடும். அதுதான் இவரது பெயருடன் இணைந்துள்ள மேனன். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், எனக்கு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு்த்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணன் மேனன் மீது நல்ல அபிமானம் உண்டு. அதனால்தான் எனது மகன் பெயரில் மேனன் என்ற பெயரைச் சேர்த்தேன் என்றார்.
அலெக்ஸ் பால் மேனனுக்குப் பிடித்த ஒரு மிகப் பெரிய போராளி - சேகுவரா. மாவோயிஸ்டுகள் போன்றோருக்கும் கூட சேர மிகவும் பிடித்தவர்தான்..


அப்படிப்பட்ட ஒரு கலக்டர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால்  கடத்தப்பட்டார்.இதை கண்டித்து சுக்மா மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தபட்டது


இவர் ஏன் கடத்தப்பட்டார்? .நல்லது செய்தார்.என்னது அது?

அரசின் பல திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.மக்களுக்கு கல்வி அறிவு புகட்டினார்.இதனால் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு மக்களிடையே சரிந்தது.
இவரை போல் நல்ல கலக்டர் நாட்டிற்கு மிக அவசியம்.மத்திய-
மாநில அரசே போர்கால நடவடிக்கை எடு.




Sunday, April 22, 2012
Posted by Blogger

Popular Post

- Copyright © 2013 கல்யாணகுமார் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -